செங்கல்பட்டை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வாகிய நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்வதில் இன்னும் பின்வாங்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதற்கு முன்பதாகவே சேலத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரை சேர்ந்த கனிமொழி எனும் மாணவி அடுத்தடுத்து நீட்தேர்வு அச்சத்தினால் உயிரிழந்தனர்.
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் இறந்தது தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி சவுந்தர்யா தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த நான்கு தினங்களில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது செங்கல்பட்டை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அய்யநேரி பகுதியை சேர்ந்த அனுசியா எனும் மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…