திருப்பூரில் ராம்குமார் பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். டிரைவராக பணியாற்றி வரும் ராம் குமார், தனது மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டில் விட்டு வந்துள்ளார். ராம்குமாரின் மனைவி சுகாசினி அருகிலுள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் ராம்குமார் தனது தந்தைக்கு கால் செய்து தனது மகனை பார்த்து கொள்ளுங்கள், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்து வைத்துள்ளார்.
அதனையடுத்து, பேஸ்புக் லைவ் போய் கொண்டிருக்கும் போதே ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லைவ்வில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த இந்த சம்பவத்தை பார்த்த நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, சுகாசினி நேரில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராம்குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், இந்த மானம் கெட்ட உலகத்தில் வாழ தனக்கு விருப்பம் இல்லை என்றும், யாரும் பீல் பண்ணாதீங்க என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விசாரணையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…