குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

விரைவில் தமிழ்ப் பெயர்களுக்கென தனி இணையதளம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இந்த நேரத்தில் நான் மணமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து கொள்கிறேன். மணமக்கள் மட்டுமில்லை வீடுகளுக்கும் சேர்த்து வைக்கிறேன்.

அது என்னவென்றால், மயிலை த. வேலு அவர்கள் தன்னுடைய மகளுக்கு அனுஷா என்கிற பெயரை வைத்துள்ளார். இது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் இதனை பிரச்சினையாக்க நான் விரும்பவில்லை. ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய மணமக்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள்” எனவும் முதல்வர் பேசினார். 

முதல்வர் பேசிய அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு அதில் ” குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்” என கோரிக்கை வைத்து கூறியிருந்தார்.

குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் அரசு சார்பில் உருவாக்கப்படும் என அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் கூறியதாவது ” தம்பி வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்