அழிந்து வரும் உயிரினங்களை வேட்டையாட இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இதையும் மீறிபல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கடத்தல்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கி வருகிறது.இந்நிலையில் அயல்நாடுகளுக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகையில் பதுக்கி வைத்திருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனசரகர் அயூப்கான் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல்துறையினர் நாகை அக்கரைபேட்டை பகுதியில் நேற்று திடீரென அதிரடி ஆய்வு நடத்தினர். அதில் அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே 1 டன் எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியை சேர்ந்த சந்திரசேகர்(45) மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை சாலையை சேர்ந்த செண்பகம்(60) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் நடத்திய சோதனையில், அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியிலும் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது, பதப்படுத்தாமல் 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினத்தில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும் என தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…