திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 கட்சி தலைவர்களிடம் பேசியிருந்தார்.
இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கீழ்க்காணும் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன். அதன்படி, உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த போராட்டத்திற்கு சோனியா காந்தி அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…