தமிழகத்தில் 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
இதனால், 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த, ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செல்லும். அரக்கோணம், கோயம்புத்தூர் வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த 3 சிறப்பு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…