திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.ஆகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி வருகின்ற 4-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்,5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் திருவைகுண்டம் பகுதிகளிலும்,6-ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் ,7-ஆம் தேதி தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் ,8-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…