cmstalin [File Image]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து இன்று இராமலிங்கம் பிள்ளை , வீரமாமுனிவரின் சிலையை திறந்து வைத்தார். மேலும் சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். அதன்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் மார்பளவு சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
யாருடன் கூட்டணி- கமல்ஹாசன் ஆலோசனை..!
அதேபோல தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களுக்கு திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் “வாளுக்குவேலி அம்பலம்” மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோரின் சந்திப்பின் நினைவாக சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…