ஸ்டெர்லைட் வழக்கு.! மீண்டும் டிசம்பர் 16-ம் தேதி விசாரணை.!

- உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
- ஆகஸ்ட் 30 தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர்16 முதல் 20 வரை விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மே 22-ம் தேதி போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய கடுமையான போராட்டத்தின் விளைவாகக் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது.மேலும் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்நிலையில் ஆகஸ்ட் 30 தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர்16 முதல் 20 வரை விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை செய்யும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025