கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதலை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளார்கள்.
தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முகக்கவசம் அணியாத தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து இன்று மட்டும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை மொத்தம் ரூ. 2,26,07,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…