அதிகாரத்தை தடுக்க கடும் விதிகள் தேவை – தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடும் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலின்போது அரசியலமைப்பு பதிவிலுள்ள அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவை பரிசீலினை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அவர்களையும் கண்காணிப்பதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிமதி அமர்வு, தேர்தலின்போது அரசியலமைப்பு பதிவிலுள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.