அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது, பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே, புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.