, , ,

மாணவர்களே பிரச்சனையா?…”இந்த உதவி எண்ணிற்கு அழையுங்கள்;உடனே நடவடிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

By

கோவை:பள்ளி மாணவ,மாணவியர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நேற்று முன்தினம் சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்,பல்வேறு அமைப்புகள்,மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து,தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதனை  தொடர்ந்து,பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அப்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில்,பெங்களூரில், தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

“மாணவியின் இழப்பு தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு என்று பார்க்கவில்லை,மாறாக,எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி , பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்கிற முறையில் இதற்கான நீதி விசாரணை சரியான முறையில் நடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அதே சமயம்,போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.பள்ளி மாணவ மாணவிகளுக்கான உதவி எண் 14417 உள்ளது. மாணவ மாணவியர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.அதன்பேரில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Dinasuvadu Media @2023