பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

Su.Venkatesan OdishaAccident

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியுள்ளதாக எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்.

ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் எனும் சிக்னல் மாற்றத்தினால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியதாவது, பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி விளம்பரம் செய்வதை மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியது தான் இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 13200 ரயில் இன்ஜின்களில் வெறும் 65 இன்ஜின்களில் மட்டுமே கவச்(ரயில் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் சாதனம்) எந்திரம் பொறுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 2022 மார்ச்சுக்கு பின் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்