சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

Hiphop Aadhi gives surprise to Aruna

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9-வது சீசனும் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள காரணத்தால் வாரம் வாரம் ஒவ்வொரு பிரபல இசையமைப்பாளர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார்கள்.

அந்த வகையில்,கடந்த வாரம் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி வருகை தந்திருந்தார். அவருடைய முன்பு சூப்பர் சிங்கர் போட்டியாளர் அருணா அருமையாக பாடி தன்னுடைய தேன் குரலால் ஹிப் ஹாப் ஆதி மனதை மட்டுமின்றி மொத்தமாக அனைவருடைய மனதையையும் கவர்ந்தார்.

அவருடைய குரலை கேட்டு ஆச்சரியமான ஹிப்ஹாப் ஆதி “நீங்கள் நன்றாக படுகிறீர்கள் என்னுடைய இசையில் கண்டிப்பாக நீங்கள் ஒரு பாடல் பாடுவீர்கள்” என கூறிவிட்டு சென்றார். அதனை தொடர்ந்து சொன்னதை செய்து காட்டியுள்ளார். ஆம், அருணாவிற்கு தன்னுடைய இசையில் ஒரு படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

அதற்காக அருணாவை தன்னுடைய ஸ்டுடியோவிற்கு வரவழைத்து பாடலை பதிவும் செய்துள்ளார். இதனால் சற்று கண்கலங்கியும் உள்ளார் அருணா. இது தொடர்பான அந்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சொன்னதை செய்துகாட்டிய ஹிப்ஹாப் ஆதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்