8 வழிச்சாலைத்திட்டம் தொடர்பாக செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை- சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்கில் திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு இன்று திட்ட வரைபடத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில், சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கவில்லை என்றால் 8-வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று உறுதி அளித்தது.இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா,8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதிபெற தாமதமானால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் 8 வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது.அவசியமான திட்டம் என்கிறீர்கள் ,ஆனால் சுற்றுச்சூழல் அனுமதிக்கு தாமதம் ஆகும் என்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.இந்த திட்டமே குழப்பமாக உள்ளது .நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னனென்ன என்றும் கேள்வி எழுப்பினார் .இறுதியாக செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார் உச்சநீதிமன்ற நீதிபதி.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…