பேரறிவாளன் விடுதலை ! ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

supreme court grants one week time for the TN governor to decide on the release of Rajiv Gandhi assassination convict Perarivalan's release.

பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்   பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.