அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – தமிழக அரசு

அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் என அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை 100% தேர்வு செய்ததற்காக அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி படத்தாள் கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதனிடையே, இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில் குறுகிய கால மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025