தமிழக பாஜக மாநில செயலாளர் பதவி விலகல்.! அண்ணாமலை அறிவிப்பு.!

Tamilnadu BJP President Annamalai

தமிழக பாஜக மாநில செயலாளர் சரவணகுமரன் பதவி விலகியுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

தமிழக பாஜக மாநில செயலாளராக பொறுப்பில் இருந்த சரவணகுமரன் தனது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் கட்சி பதவியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டுள்ளார். இதனை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அதில், சரவணகுமாரன் தனது சொந்த காரணங்களுக்காக கட்சி பணியில் இருந்து தனனை விடுவித்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனால், அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்று முதல் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

மத்திய அரசின் உயர் பதவியினை துறந்து தேசப் பணிக்காக கட்சியில் இணைத்து இதுநாள் வரை சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். சொந்த பணியினை விரைவில் முடித்து தேச முன்னேற்றத்திற்கு நல்ல பொறுப்புக்களை ஏற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என அண்ணாமலை தான் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்