தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஆற்றும் பணிகள் குறித்து, எதிர்கட்சியினரின் விமர்சங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஆற்றும் பணிகள் குறித்து, எதிர்கட்சியினரின் விமர்சங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘கடந்த 2015ம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு மழையின் அளவு 2015 இல் 518 மில்லி மீட்டராக இருந்தது. 2021 இல் 613 மில்லி மீட்;டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 1,167 மில்லி மீட்டர் 1,121 மில்லி மீட்டராக பெய்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை பெய்த காலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 59 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் வீதம் ரூ. 2.36 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கால்நடைகளுக்கு 2.84 கோடி ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 1.17 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.முக. ஆட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து கண்காணித்திருந்தால் இந்த அளவிற்கு கூட பாதிப்பு வந்திருக்காது.
கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுவார். இல்லையெனில் தமது சொகுசு வாகனத்தில் பயணம் செய்து மக்களுக்கு ஆறுதல் கூறுவார். ஆனால், இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களின் துயரைத் துடைக்கிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 2015 வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பை மக்கள் மறக்க மாட்டார்கள். அரசியல் எல்லைகளைக் கடந்து பாடுபடுகிற தமிழக முதலமைச்சருக்கு பேரிடர் காலங்களில் உறுதுணையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமையாகும். அந்த வகையில் எதிர்க்கட்சியாக இருக்கிற அ.தி.மு.க.விற்கும் இது பொருந்தும்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…