தமிழக முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் இன்று முதல் 21- ஆம் தேதி வரை திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று திருவள்ளூர் மாவட்டத்திலும்,20-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும் ,21-ஆம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025