சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜை தொடங்கியது.!

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ஆவணி மாத பூஜைக்காக  நேற்று

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ஆவணி மாத பூஜைக்காக  நேற்று நடைதிறக்கப்பட்டது.

இன்று காலை  அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு  பூஜை தொடங்கியது. பின் காலை 10 மணிக்கு நடை மூடப்படும்.  பின்னர், மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு நடை மூடப்படும்.

கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை, சபரிமலையில் தந்திரியாக இருந்த கண்டரரு மகே‌‌ஷ் மோகனரின் ஒரு ஆண்டு பதவிகாலம் நிறைவு பெற்றதால், புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்றார்.