தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பொறுப்பேற்றார்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை வருமான வரித்துறை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பதவியேற்பு.
தமிழ்நாடு, புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். 1987-ல் வருவாய் பணியில் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன் 34 ஆண்டுகால பணியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
நாக்பூரில் உள்ள நேரடி வரிகளுக்கான அகடாமியில் பயிற்சி பெற்ற பிறகு, சென்னை, மும்பை, நாக்பூர் மற்றும் பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
34 ஆண்டுகளாக அவரது பணியில் மதிப்பீடு, தீர்ப்பாயம் பிரதிநித்துவம், டிடிஎஸ், விசாரணை, மத்திய கட்டணம், சர்வதேச வரி விதிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பணிகளை வகித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025