தமிழக முதலமைச்சராக 4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது.இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் ஆளுநா் மாளிகையில் தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாா்.
இந்நிலையில் மூன்றாண்டு முடிவடைந்தது.நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி இந்நிகழ்வை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…