தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுமா?! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது குறித்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாகஅறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட தளர்வுகள் காரணமாக தமிழக அரசானது கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னர் 2 நாட்கள் மதுக்கடைகள் திறந்திருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் சரியான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என கூறி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பிற்குக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்கில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறக்க தடைவித்தும், ஆன்லைனில் மட்டுமே மது விற்கவும் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதாக கூறபட்டது. இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் டாஸ்மாக் குறித்து முக்கிய தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025