காந்தி ஜெயந்தி,மிலாடி நபியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்க அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியும்டாஸ்மாக்கடைகள் அடைக்கப்படும் எனடாஸ்மாக்மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்குடாஸ்மாக்மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:”வருகின்ற02.10.2021 அன்று காந்தி ஜெயந்தி (சனிக்கிழமை) மற்றும் 19.10.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று மது விற்பனை இருக்காது.அப்போது,மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் எந்த மீறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node