#BREAKING: முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!

10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும், கொரோனா அதிகரித்து கொண்டே செல்வதால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் திங்கள் அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் வருகின்ற 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025