மூடிய குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்க அனுமதிப்பது குறித்து இன்று உத்தரவு..!

தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமான ஆலைகளை மூட உத்தரவிட்டு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்கவும் ,நடவடிக்கை எடுக்காத ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்ப்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் 682குடிநீர் ஆலைகள் மூடப்பட்டதாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து கடந்த காலங்கள் சட்டவிரோதமாக குடிநீர்ஆலைகள் செய்த செயலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். மேலும் போராட்டங்கள் மூலம் குடிநீர்ஆலைகள் நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்க அனுமதிப்பது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025