தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகள்!உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாத்தின்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக டிஜிபி திரிபாதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல்த்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில்,தமிழகத்தில் நுழையக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.நேற்று இரவு முதலே பாதுகாப்பு தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா அதிகம் கொண்டாடப்படும் கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை வழியாக தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025