அந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்
எனது கடைசி மூச்சு உள்ளவரை பாஜகவை நான் எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், பாஜக கட்சி தலைவர்கள் அதிமுகவின் தோள்களில் ஏறிக்கொண்டு தமிழகத்தில் நுழைந்து முடியும் என்று எண்ணி பார்க்கிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும், பாஜகவை தோளில் சுமந்துகொண்டு வருவதற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிட்டுளார். நான் மிக தெளிவாக இருக்கிறேன் என்று கூறி ப.சிதம்பரம், எனது உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை நான் எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன் எனவும் பேசியுள்ளார்.