ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவிடம் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரவ் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை எஸ்.சி., எஸ்.டி., தடுப்பு சட்டத்தின் கீழ் புவனகிரி காவல்துறை கைது செய்தது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…