Tirupur Journalist Nesa Prabhu [File Image]
நேற்று இரவு திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த தனியார் செய்தி சேகரிப்பாளர் நேசபிரபு என்பவரை சில மர்ம நபர்கள் கூரான ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரபு தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பத்திரிக்கையார்கள் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவதரிக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நேச பிரபு சில தினங்களுக்கு முன்னர் பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக செய்தி சேகரித்து வெளியிட்டு இருந்தார் . அந்த செய்தி தொடர்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு..!
இந்நிலையில் நேற்று இரவு நேசபிரபு, பல்லடம் பகுதி காவல்துறை அதிகாரிக்கு போன் செய்து புகார் தெரிவித்ததாக ஒரு ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் , சார் என்னை R15ல என்னை இரண்டு பேரு ஹெல்மெட் போட்டு வந்தாங்க சார். இப்போ அவங்க பல்லடம் தாண்டி போயிருப்பாங்க சார்.
யமஹா R15 கருப்பு கலர் சார். அவனுக போய்ட்டாங்க. இப்போ புடிக்க முடியாது. கேமிராவவுல இருக்கு சார். சார் அவனுக வந்துட்டானுக சார். 5 கார்ல வந்துருக்காங்க சார். இன்னோவா, எர்டிகால வந்துருக்கானுக சார். அவ்ளோதான் என் லைப் முடிஞ்சது சார்.” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அந்த ஆடியோ நிறுத்தப்பட்டுவிட்டது. (குழந்தைகள், வயதானோர் பாதுகாப்பு கருதி அந்த ஆடியோவை நமது தளத்தில் வெளியிடவில்லை)
நேற்று இரவு சம்பவத்தன்று பத்திரிகையாளர் நேசப்பிரபு காவல்துறையினரிடம் பேசியதாக இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காமநாயக்கன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் மருத்துவ செலவுக்கு 3 லட்சரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…