ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவியுடன் சேர்ந்து மதுரையில் உள்ள அறியமங்கலத்தில் வசித்து வந்துள்ளார்.
அப்போது இவருக்கும் எருமைகுளத்தை சேர்ந்த வழிவிட்டான் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன்,வழிவிட்டானை கீரத்துறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதை தொடர்ந்து தமது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்ததால் தமது சொந்த ஊரான கமுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தனது அண்ணன் வழிவிட்டானை கொலை செய்த மணிகண்டனை கொன்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் தம்பி சுந்தர் தேடி வந்துள்ளார்.
நீண்ட தேடுதலுக்கு பின்னர் மணிகண்டன் கமுதியில் இருப்பதை அறிந்த சுந்தர் தனது நண்பர்களுடன் கமுதி சென்றுள்ளார்.வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த மணிகண்டனை அரிவாள் போன்ற பலமான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதன் காரணாமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் எருமைக்குளம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சுந்தரையும் அவரது நண்பரையும் வளைத்து பிடித்துள்ளனர்.பின்னர் கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…