அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு… தாமாக முன்வந்து விசாரணை செய்யும் உயர்நீதிமன்றம்.!

கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பொறுப்பில் இருந்த தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது பதியப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கானது வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் போதிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை என கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில், அமைச்சர் விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வைந்து மறுவிசாரணை செய்யவுள்ளது. இந்த வழக்கனது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வு முன்பு இன்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது .
எந்த அடிப்படையில் வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்தது என்றும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025