ED Raid:சென்னையில் அமலாக்கத்துறை 13 இடங்களில் சோதனை !

அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றின் வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 13 இடங்களில் நடைபெற்று

Enforcement Department

அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றின் வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 13 இடங்களில் நடைபெற்று வருகிறது.

ரூ.225 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக இந்த நிறுவனம் மீது  ஏற்கனவே சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்காக பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையானது ஜேம்ஸ் வால்டர் என்ற நபருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனம் தொடர்புடைய  இடங்களான வேளச்சேரி,கோடம்பாக்கம்,மேற்கு தாம்பரம் ,அமைந்தகரை,சோழிங்கநல்லூர்  உள்ளிட்ட பகுதிகள் நடைபெற்று வருகிறது.