#Breaking:ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா,தீபக் சேர்ப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டு செல்வ வரி கணக்கை செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடர்ந்த  நிலையில்,செல்வ வரி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து,செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.இதனிடையே,கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தார்.

இதனையடுத்து,வேதா இல்லம் தொடர்பான வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது அவர்களை ஜெயலலிதாவுக்கு பதிலாக செல்வ வரி வழக்கில் சேர்க்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில்,கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும்,வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா,தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர் வழங்க வேண்டும் என்று கூறி அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்