#Alert:இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

The Chennai Meteorological Department has forecast a new depression in the Bay of Bengal today.

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்த நிலையில்,இடைவிடாது பெய்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது.எனினும்,சென்னைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மண்டலம் விளக்கிக் கொண்டதால் பொதுக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இந்நிலையில்,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவ.15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன்பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகத்தின் கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,கன்னியாக்குமரி மாவட்டத்தில் மழை தொடரும் என்றும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில்,கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை வரை பெய்து வருகிறது.மேலும்,குமரிக்கடல்,கேரள கடலோரம், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.