திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.இந்நிலையில் திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை கட்டடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார். ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. திண்டுக்கல்லை தொடர்ந்து, மதுரைக்கு இன்று மதியம் செல்கிறார் முதலமைச்சர்.நாளை நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு செல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த…
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு…
சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…
சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…