முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி பெறப்பட்டுளளது.
கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 31.3.2020 வரை வழங்கப்பட்ட மொத்த தொகை 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாய் ஆகும் .நன்கொடையளித்தவர்களுக்கு தனித்தனியே ரசீது வழங்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணத்திற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 31.3.2020 வரை வழங்கப்பட்ட மொத்த தொகை 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாயாகும்.
நன்கொடையளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீது அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. #Corona pic.twitter.com/Hx5F7SrJRw
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 1, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025