ஆந்தையை கூட்டம் கூட்டமாக துரத்திய காக்கைகள்.! ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவன்.!

காக்கைகளிடம் சிக்கிய ஆந்தையை காப்பாற்றி பத்தாம் வகுப்பு சிறுவன் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள மங்கலக்குறிச்சியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஹரபிரியன். இவர் வெளியில் சத்தம் கேட்டு சென்ற போது அங்கு காக்கைகள் கூட்டம் கூட்டமாக இணைந்து ஆந்தை ஒன்றினை துரத்துவதை கண்டுள்ளார். உடனடியாக அந்த மாணவன் துரத்தி கொண்டிருந்த காக்கைகளை விரட்டியுள்ளார்.
அதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஆந்தைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றியுள்ளார். அதனையடுத்து அந்த ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவனின் மனிதாபிமான செயலை வனத்துறையினர் பாராட்டினார்கள். அதன் பின்னர் வனத்துறையினர் ஆந்தைக்கு சிகிச்சை அளித்து விட்டு காட்டில் பறக்க விட்டுள்ளனர். ஆந்தையின் உயிரை காப்பாற்றிய சிறுவனின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025