ஜோதிடத்தை நம்பி மகனை கொன்ற தந்தை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த சமயம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் ராம்கி(29)க்கும், காயத்ரி என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் இவர்களுக்கு சாய்சரண் என்ற மகனும், சர்வேஷ் என்ற மூன்று மாத கைக் குழந்தையும் உள்ளனர்.
ராம்கி ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறா.ர் இவருக்கு ஜோதிடத்தின் மேல் அதிகமான நம்பிக்கை உண்டு. இதனால் இவர் பல்வேறு ஜோதிடரை சந்தித்து தனது வாழ்க்கையின் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு ஜோதிடர் உங்களது மூத்த மகன் சாய் சரண் இருக்கும் வரை உங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என தெரிவித்துள்ளார். இதனால் தனது மகனை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ராம்கி கூறுவதுண்டு. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராம்கி சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சாய்சரண் மீது ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். சாய்சரண் 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராம்கியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனது மகனை மண்ணெண்ணையை ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராம்கியின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த சமயம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…