ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கி விடக்கூடிய அரசு தான் திமுக அரசு.
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆணைப்புளி மரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, புராதன சின்னமாக விளங்கும் ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டையும், அதன்பின் மக்களை தேடி மருத்துவம் மையத்தையும் முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு. ஏழை, எளிய மக்களை ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கி விடக்கூடிய அரசு தான் திமுக அரசு. அழாத பிள்ளைக்கு பல் கொடுக்கும் தாயாக திமுக அரசு செயல்படுகிறது. அனைவருக்கும் செவிமடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025