,

வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பத்தினர்..!

By

தருமபுரி ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என மனு. 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (57) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் சென்று வித்தியாசமான மனு ஒன்று அளித்துள்ளார்.

அதில் தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தங்களுக்கு நடந்து செல்ல வழி விடாமல் வீட்டின் நான்கு புறமும் அக்கம் பக்கத்தினர் சுற்றுச்சுவர் எழுப்பியதால் கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் உறவினர் வீட்டில் இருப்பதாகவும் இது குறித்து புகார் அளித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023