26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற இரண்டு காளையர்கள்! இருவருக்கும் பைக்கை பரிசாக கொடுத்த ராகுல் காந்தி!

Congress MP Rahul Gandhi has gifted a bike to Vijay and Thirunavukarasu, who suppressed 26 bulls at Avanyapura Jallikkat.

அவனியாபுர ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவருக்கு, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல்  திருநாளில்,தமிழர்களின் வீரத்தை நினைவுகூரும் வண்ணம், ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடைபெறுகிறது. இன்று உலக புகழ் பெற்ற அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிற நிலையில், இந்த போட்டியை காண காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வருகை புரிந்தார்.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.