ஜி ஸ்கொயர் விவகாரம்: 4வது நாளாக தொடரும் சோதனை.!

ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் 4வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை.
பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் 4-வது நாளான இன்றும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டியதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூர், பெல்லாரி உள்ளிட்ட தொடர் சோதனை நடந்து வருகிறது.