தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில்,வரும் 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது,தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர,மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை இயங்கி வந்தன.
இந்நிலையில்,இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர,மற்ற அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…