மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுவதாக ஓபிஎஸ் அறிக்கை.
மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனை விரிவுபடுத்தினால் அரசு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பது கணிசமாக குறைவதோடு அரசு ஊழியர்களின் நலன் காக்கப்படும். எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்தியா முழுவதும் 08-01-2022 அன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 ST6r! அளவிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327 என்ற அளவிலும் இருக்கின்ற நிலையினைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில விலக்குகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
மத்தியப் பணியாளர் நலத் துறை அமைச்சர் அவர்கள், கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய அரசுப் பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், இந்த விலக்கு 31-01-2022 வரை அமலில் இருக்கும் என்றும், வீட்டிலிருந்தே பணிபுரிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்த வரையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், துணைச் செயலாளருக்கு கீழுள்ள பதவிகளை வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்த வரையில், மொத்தமுள்ள பணியாளர்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டுமென்றும், மீதமுள்ளவர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றலாம் என்றும், வீடுகளிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டுபென்றும், அலுவலகக் கூட்டங்கள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலம் நடைபெற வேண்டும் என்றும், பார்வையாளர்கள் சந்திப்பைப் பொறுத்தவரையில், அவசியமற்ற சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும், பணியிடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டுமென்றும், இவை அனைத்தும் 31-01-2022வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 08-01-2022 அன்று கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,978 ஆகவும், அதாவது கிட்டத்தட்ட எட்டு விழுக்காடும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகவும் இருந்த நிலையில், 09-01-2022 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,895 ஆகவும், அதாவது 8.7 விழுக்காடாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு கூடுதலாக இரண்டாயிரம் பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது, இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வார காலமாக அரசு ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே அலுவலங்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற – சூழ்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலம் பாதுகாக்கப்படுவதோடு, அரசு ஊழியர்களை கொரோனாத் தொற்று பாதிப்பது கணிசமாகத் தடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…