நோயாளியை கீழே தள்ளிவிட்ட மருத்துவமனை ஊழியர்! மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு!

நோயாளியை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு.
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவமனை ஊழியர் பாஸ்கர் என்பவர், நோயாளி ஒருவரை சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி ஊழியர் பாஸ்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஆட்சியர் அவரை பணி நீக்கம் செய்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இது குறித்து தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025