சற்று முன்னர்...உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி;புயலாகவும் மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

The Indian Meteorological Department has said that a new depression has formed in the southern Andaman Sea.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று (30-11-2021) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,இன்று தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான பின்னர் 48 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்நிலையில்,வங்கக்கடலின் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதியகாற்றழுத்ததாழ்வுபகுதிஉருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்தகாற்றழுத்ததாழ்வுபகுதியாக மாறி பின் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும்,அதன்பின்னர்,புயலாக மேலும் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசாவை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.