Breaking:வாகனங்களில் இந்த படங்களை 60 நாட்களுக்குள் நீக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

The Madurai branch of the High Court has issued an order to remove pictures of leaders on vehicles.

வாகனங்களில் தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசியல் சார்ந்த படங்களை 60 நாட்களில் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும்,வாகனங்களில் கட்சி கொடிகள்,கட்சி தலைவர்களின் படங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும்,தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்,தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள்,விதி மீறிய நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் நீக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50% வாகனங்களில் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது.இதனால்,அவர்கள்சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.